10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யதுசன் சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
பத்தாண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
கண்ணே பத்து வருடங்கள்
ஆயினும் எம் குலக்கொழுந்தே - நாம்
பத்து நிமிடங்கள் போல்
இன்றும் தவிக்கின்றோம்
பட்டாம் பூச்சியாய் பறந்தவன் நீ
எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள்
கண்டவன் நீ...
நீங்காத உன் நினைவுகள்
நித்தம் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே
இன்முகம் காட்டி எம் இல்லம் சுற்றிய
நாட்களை எப்படி மறப்போமடா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute