Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1974
இறப்பு 24 DEC 2019
அமரர் ஜனார்த்தனி சரவணன் (ஜனா)
Senior Scientist- Research & Development, Abbott Laboratories- Oxford
வயது 45
அமரர் ஜனார்த்தனி சரவணன் 1974 - 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, லண்டன் Tooting ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜனார்த்தனி சரவணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-12-2024 

ஆண்டுகள் ஐந்து ஆகியும்
ஆறவில்லை எந்தன் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்  
மாறாது உந்தன் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எந்தன் தெய்வமே!

உன் செல்ல சிரிப்பும்
உன் செல்ல குரலும்
தேடி அலைகிறேன்
இப் புவியில்
தேம்பி அழுகின்றேன்  
உன் நினைவால்...

ஆண்டுகள் எத்தனை போனாலும் நீ
 எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது  
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
 இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 05 Jan, 2020
நன்றி நவிலல் Sat, 25 Jan, 2020