1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 20 NOV 1957
விண்ணில் 27 SEP 2020
அமரர் ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி 1957 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 63 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாரிடம் சொல்லி அழுவேன்
யாரிடம் அவள்கதை கூறுவேன்
யாரிடம் அவள்முகம் காணுவேன்- இனி
யாரிடம் அவள் தரும் அன்பைத் தேடுவேன் முடியுமா?...

என் தேவியின்
அன்புக்கும் கனிவுக்கும் முன்னால்
எவராலும் ஈடுசெய்ய முடியுமா?...

தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
தவிக்கின்றேன்.. தள்ளாடுகின்றேன்..
தயங்குகின்றேன்.. என் தவமணியே...

ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே....

ஆயிரம் உறவுகளிருந்தென்ன ஆகிடுமா...
உம் அன்புக்கு ஆகவில்லை அலைகின்றோம்- எம்
அன்னையின் அன்புக்காய்... எம் தாயே

நீங்கள் எம்மைவிட்டுச் சென்று
நாட்கள் மாதமாகி இன்று
வருடம் ஒன்றாகிவிட்டது- ஆனால்
இன்றும் எம் கண்முன்ன
மலையென உம் பூமுகம்- எம் நெஞ்சில்

கண்முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உம் முகம் என்னாளும் உயிர் வாழும்
எம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்ட எம் பாசமிகு குல விளக்கின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் உங்கள் நினைவுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்