1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 AUG 1944
இறப்பு 16 APR 2020
அமரர் ஐயாத்துரை வன்னியசிங்கம் (நாகராசா)
வயது 75
அமரர் ஐயாத்துரை வன்னியசிங்கம் 1944 - 2020 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை வன்னியசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு வழிதனிலேஎமை
அழைத்துச் சென்றீரே
பண்பான பாதையிலே
எமைப் பயணிக்கச் செய்தீரே..
பக்குமாய்ப் பிழை திருத்தி
வாழ்வதனில் மிளிர வைத்தீர்
அக்கு வேறாய் ஆணிவேறாய்
அகிலத்தை அறிய வைத்தீர்..
இரக்கம் சுரக்க வல்ல
இருதயம் எமக்களித்தீர்..
ஈகைகள் செய்ய நல்ல
பகுத்தறிவை எமில் வளர்த்தீர்..
நாணயம் கொண்ட வரை
நாம் விரும்ப நீர் வாழ்ந்தீர்
நா நயம் மிக்கவராய்நாம் வாழ நீர் ஆனீர்..
அமைதியின் உருவமாய்
எமை நீர் வார்த்தெடுத்தீர்..
அடக்கத்தின் இருப்பிடமாய்
அமை நீர் வளர்த்தெடுத்தீர்..
பாசத்தின் வாழ்விடமாய்
பார் புகழ வாழ்ந்தவரே..
துன்புற்றோர் துயர் நீக்கி
மான்புடனே வாழ்ந்தவரே..
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போகாது..
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்..
மண் விட்டு மறைந்து நீர்
விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்...     


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Apr, 2020
நன்றி நவிலல் Wed, 13 May, 2020