Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 01 JUL 1954
மறைவு 24 AUG 2026
திரு ஐய்யாதுரை இதயகுமார் (நம்பியார்)
வயது 72
திரு ஐய்யாதுரை இதயகுமார் 1954 - 2026 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ், சாவகச்சேரி, நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐய்யாதுரை இதயகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இதயம் ஏற்க மறுக்கிறது எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டன 31 நாட்கள் 
எத்தனை நாட்கள் ஓடினாலும் ஏற்குமோ
 எம் மனம் உங்கள் பிரிவை...

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

உருக்குலைந்து மாய்கின்றோம்
மாதம் ஒன்று வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்

உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
 மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.