

அன்பு நண்பனே பாலன்.... நட்புக்கு இலக்கணமாய், மாண்புறு மனிதனாய், சமூக நீதிக்கான போராளியாய், பொறுப்புள்ள குடும்பத் தலைவனாய், நேசமுள்ள காதல் கணவனாய், பாசமுள்ள தந்தையாய், உறவுகளுக்கிடை உறவுப்பாலமாய், வையத்துள் வாழ்ந்து சிறந்தவனே! இறைமடி இளைப்பாற எண்ணி எமை நீங்கிச்சென்றஇனியவனே உனது மரணம் வாழ்வின் முடிவல்ல. நீ விதைத்தவை இந்த மண்ணில் இன்பம் கொடுப்பவையாகவே அறுவடையாகும். ஒவ்வொரு அறுவடையிலும் நீயே நிறைந்திருப்பாய். உனது வம்சம் ஆலமரம்போல் மற்றவர்களுக்கும் நிழலாகி ஓங்கி விரிந்து வளரும். அமைதியாய் இறைமடி உறங்கு. உன் இனிய நினைவுகளை எமக்கு விட்டுச் சென்றமைக்கு நன்றி. 💐💝🙏💝💐 உனது நண்பர்கள் சார்பில்... நடராசா கமலாகரன்[ குகன்] கல்வயல்
