

திதி : 30-10-2023
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிராக வாழ்ந்து
என் உயிரோடு கலந்தவரே
எங்கே போனீர்கள்?
எம்மையெல்லாம் விட்டகன்று
பதில் ஏதும் இல்லாமல்
தவிக்கின்றேன் தனிமையில்!
என் பக்கத்தில் நீங்கள் இருந்தால்
பலகனவுகள் நனவாகும்
பாதியில் நீங்கள் போனதால்
உங்கள் நினைவால் பரிதவிக்கிறேன்
என் பலத்தில் ஒரு பாதி
நீங்கள்
என எண்ணியிருந்தேன்
இன்று மறுபாதி என்னிடமில்லையே
எங்குசென்றீர்கள் எம்மையெல்லாம் விட்டுவிட்டு
ஆண்டுக்கொருமுறை அஞ்சலி போதுமா
எம் தெய்வத்திற்கு
தினம்தோறும்
உங்களின் நினைவுகள்
கண்ணீராய் எம் - கண்களில்....
இன்றுபோல் இருக்கிறது
இதற்கிடையில்
ஐந்தாண்டும் சென்றதுவோ?
ஒரு முறையாவது உங்களை
பார்க்க மாட்டோமா
என்று பதறுகின்றோம்
இனியொருபோதும்
உங்களை பார்க்க மாட்டோமே
என்கின்ற போது
எம் உயிர் சோர்ந்து போகிறதே.
எம்மை வாழவைத்த அன்புத்தெய்வத்திற்கு
கோடானகோடி நன்றிகளும் அஞ்சலியும்!!!
அன்புள்ள தாத்தாவே அப்பப்பாவே
உங்களைப் போல் ஒருவரை
நாம் சந்தித்ததில்லை
அன்பில் அறிவில் ஆற்றலில்
உங்களுக்கு
நிகர் நீங்களே
உங்கள் நினைவுகள்
என்றும்
எம் இதயத்தில் நிறைந்திருக்கும்
என்றும் எங்கள் மனதை விட்டு
நீங்காத தெய்வமே
எங்கள்
நல்வாழ்வுக்கு என்றும் உங்கள் நல் ஆசிகள்
எங்களை விட்டுப்பிரிந்து
ஆண்டு ஐந்தாயினும்
உங்களின் இனிய நினைவுகளைச்
சுமந்து நிற்கின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வானுலகு சென்ற எங்கள் அன்புத் தெய்வமே
என்றும் உங்கள் பாச நினைவுடன்
மனைவி, மகன், மருமகள், பேரப்பிள்ளை