

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே
பாசத்தின்
உறைவிடமே
எங்கள் அப்பா
கலகலப்பன பேசும் கனிவான
புண்ணகையும் பாசத்துடன் உறவாடும்
உங்கள் அன்பையும்
பல ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர் சொரிகின்றோம்
வானில் சிந்திடும்
துளியில்
மண்ணில் பயிர்கள் துளில்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை நாங்கள்
கண்டிட முடியாது
கன காலம் எம்மோடு வாழ்வீர்கள்
என்று நம்பி இருந்தோம்
கணப் பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கண் கலங்க
வைத்தது அப்பா?
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்
ஆண்டுகள் மூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.