யாழ். மீசாலை வடக்கு கொடிகாமம் இராமாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை ஐயாத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 30-12-2021 வியாழக்கிழமை அன்று பின் இரவு 02:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அஸ்தி சஞ்சயனம் செய்யப்படும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 01-01-2022 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
எமது குடும்பத்தலைவர் ஐயம்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்தோர், உடன் கதுமமாற்றியோர், மரணச் சடங்கிற்கு வருகை தந்தோர், ஆறுதல் கூறியோர், தொலைவில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அனுதாபம் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலி பத்திரம் வழங்கியோர், பதாகைகள் கட்டியோர், மலர் வளையம் வைத்தோர், இணையவழியிலும் இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்தோர், அஞ்சலியுரை நிகழ்த்திய உள்ளங்களுக்கும் பின்னரும் பலவகைகளில் உதவிபுரிந்தோர் மற்றும் எம்மால் நன்றிகூற தவறவிடப்பட்டோர் என சகல தரப்பினர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முகவரி: மீசாலை வடக்கு, இராமாவில், கொடிகாமம்.