![](https://cdn.lankasririp.com/memorial/notice/210397/e436beaa-113d-4d30-8b5f-d7ea5fd4a729/22-635a33ddb5eaa.webp)
யாழ். மீசாலை வடக்கு கொடிகாமம் இராமாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பொன்னாச்சி தம்பதிகளின் இளைய புதல்வரும், மீசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வம்(Thiru+ 50 உரிமையாளர்- சுவிஸ்), காலஞ்சென்ற குணசீலன்(மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி- உப அதிபர்), பரமேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற குகதாசன், உதயகுமார், புனிதராசா(பிரான்ஸ்), முருகவதனி(ஆசிரியை- கிளி/ கலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம்), புஸ்பவதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி(சுவிஸ்), யோகேஸ்வரி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்), சுரேகா(லண்டன்), விஜயதரணி(அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகாதார திணைக்களம், வடமாகாணம்), தர்சினி(பிரான்ஸ்), மதிவதனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கிளிநொச்சி), செல்வநந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தம்பிஐயா, அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்லம்மா, காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
புபிதன், துபிஷா, அபிசனா, அசானிகா, அகசனா, அக்ஷிகா, அனுஷ்மிகா, சகானா, பிரவின், அபிலாஷ், அஷ்னி, கேஷிகன், அஷ்மிதா, பிரணவன், பிரமிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இராமாவில்,
மீசாலை வடக்கு,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details