
யாழ். சரவணை மேற்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை கோபாலபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-11-2021
சரவணை பதியிலே
வந்துதித்த எம் தலைவன்
தரணியிலே எம்மை உயர்த்தி
தாங்கி ஆலமரம்- உம் விழுதுகள்
தவிக்கையிலே வேரே- நீ சாய்ந்ததென்ன
உன் துணைவி அவள் தவித்திருக்க
நீங்கள் தூரமாய் சென்றதென்ன
உன் மனையாள் முகம் காண
வருவாயோ “ஓர் கணமே”
தசமணிகளைப் பெற்றெடுத்த தார்மீக வள்ளலே
சேகரங்களையும் ராணிகளையும்- உமது பிரிவால்
தவிக்க விட்ட ஐயாவே!
செல்லமாய் எமைத் தாங்கி மெளனமாய்
சென்றதேனோ
சொந்தங்கள் பல உம்மை சுற்றி நிற்க
பந்தங்கள் சில தூரதேசம் சென்றிருக்க
மாயமாய் மறைந்ததென்ன மாண்புறு தெய்வமே
நிறைவான வாழ்வு நீர் வாழ்ந்து
நீர்க் குமிழி போன்ற வாழ்வை நன்குணர்ந்து
நிலாவாய் வானில் சென்ற எங்கள் தீபமே
கட்டிய மனைவி கலங்கி நிற்க
கண்மணி போன்ற பிள்ளைகள் கரைந்து போக
உற்றார், உறவினர், நண்பர் உடைந்து போக
காளியவள் இதயத்தில் காவிய தீபமாய்
நீர் இருக்க
பத்தாண்டு சென்றபோதும்- ஆறாது
எங்கள் சோகம்
ஆறாது எங்கள் துன்பம்
மாறாது எங்கள் அன்பு.