யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 380 பாங்ஷால் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இருதயநாதர் விக்ரோறியாபிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எமது இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அவரது அடக்கச்சடங்கு திருப்பலியில் கலந்து அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தவர்களுக்கும் மேலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிநின்ற அன்பான உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.