யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 380 பாங்ஷால் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இருதயநாதர் விக்ரோறியாபிள்ளை அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இருதயநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பீற்றர்தாஸ், அஞ்சலோ பீற்றர், அனற் ஜீவா(அவுஸ்ரேலியா), வின்சன் போல்(அவுஸ்ரேலியா), இருதயமலர்(நோர்வே), பீற்றர் போல், அருட்பணி பெற்றுஸ் தயாபரன்(புனித சவேரியார் குருமடம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜொய்சி, றூபவதி, பிரான்ஸிஸ், காலஞ்சென்ற வனிதா, கனி, ஞானசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசமாணிக்கம், வேதநாயகம், சிங்கதுரை, மனோகரசீலி, பத்திமா, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவிற்ரி, பிரசாத், மயூறி, கியூறி, பிறின்சி, சோனியா, சாரா, Dr. சாம், சர்னியா, மரிஷா, மெலணி, பஸ்ரியன், ஜெறிக்கா, சோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்வின், ஆன்றியா, அஸ்வினா, றித்திகா, ஜெய்டன், பிறேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-11-2020 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மண்டைதீவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு இறுதி வழிபாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் மண்டைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.