1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இறமேந்து தேவசகாயம்
ஓய்வுநிலை அதிபர்
வயது 95
Tribute
34
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இறமேந்து தேவசகாயம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
காலத்தின் கட்டளையோ- பப்பா
காலனவன் உனை கவர்ந்ததினால்
கடவுளோடு இணைந்துவிட்டீர்
உமை அன்றாடம் துதிக்கின்றோம்
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் பப்பா நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
உரிமை சொல்ல ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் பப்பா
என்ற உறவுக்கு யாருமே
நிகரில்லை என்பதை நாம்
புரிந்து கொண்டோம் பப்பா...
உங்கள் ஆத்மா நித்திய அமைதி பெற
நித்தமும் வேண்டுகின்றோம் நித்திய பிதாவிடம்
தகவல்:
திருமதி ஆகத்தம்மா மற்றும் பிள்ளைகள்