Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 1944
இறப்பு 21 AUG 2020
அமரர் இந்திரகுமார் கணபதிப்பிள்ளை 1944 - 2020 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன் குளம், இந்தியா சென்னை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திரகுமார் கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஐந்து ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...  

தகவல்: குடும்பத்தினர்