Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 JAN 1953
இறப்பு 26 JUN 2024
திருமதி இந்திராணி சிவதாஸ்
ஓய்வுபெற்ற அதிபர்- யா/வேலணை சரஸ்வதி வித்தியாலயம்
வயது 71
திருமதி இந்திராணி சிவதாஸ் 1953 - 2024 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி சிவதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பு அம்மாவே
நீங்கள் எமைப் பிரிந்து
மாதம் ஒன்று ஆகி விட்டது
 ஆயிரம் ஆயிரம்
உறவுகள் இருந்தாலும்
 அம்மா என்றழைக்க
 நீங்கள் இப்பூவுலகில் இல்லை...
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
 கல்விச் செல்வத்தால்
 எம்மை நாடறிய வைத்தீர்கள்
 குடும்பத் தலைவியாய்
 கடமையில் ஆசானாகவும்
 இவ்வுலகில்
 மிளிர்ந்தீர்கள்!
 உங்கள் புன்சிரிப்பு நித்தம்
எமை வாட்டுகின்றது அம்மா
 இன்றுடன் 31 நாட்கள் 
ஓடி மறைந்தாலும்
 உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னரின் அந்தியேட்டி கிரியைகள் 24-07-2024 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு “கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்”,26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்வு ந.ப 12:00 மணியளவில் “கம்சிகா மஹால் மண்டபத்திலும்” (ராஜா கிறீம் ஹவுஸ்) நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 41/4,
ஆத்திசூடி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.