வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி தெய்வேந்திரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் அன்னையே
அன்பு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது அன்னையே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
அமரத்துவம் எய்திய எங்கள் குடும்பவிளக்கு இந்திராணி அவர்களின் மறைவில் கலந்து கொண்டு ஆறுதல் படுத்திய அனைத்து அன்புகூர் உள்ளங்களுக்கும், அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்த வேளை மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், இரங்கல் உரை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும், தொலைபேசி, சமூகவலைத்தளங்கள் மூலமாக அனுதாஅம் தெரிவித்த அனைவருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், எமது வீட்டுக்கு வந்து உணவு அளித்து உபசரித்த எமது இக்கட்டான வேளையில் ஆறுதல் கூறி எமது துன்பத்தில் பங்குகொண்ட அனைத்து அன்புகூர் உள்ளங்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஜெயம் ,ஆலால்