யாழ். கரவெட்டி கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்ட இன்பவதி கந்தப்பு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புக்கு இலக்கணமாய்
அரவணைத்து வாழ்ந்தீர்கள்!
பண்பின் சிகரமாய்
பணிவாக வாழ்ந்தீர்கள்!
எங்கே சென்றாலும் எங்களிடம் சொல்வீர்களே!
எங்கே சென்றீர்கள் எங்களிடம் சொல்லாமல்..?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்