
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி யோகராசா அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(மீசாலை), தங்கராணி(கெருடாவில்), யோகராணி(கனடா), யோகேஸ்வரன்(கனடா), தவயோகராணி(நெல்லியடி), பிரேமகலா(அல்லாரை), காலஞ்சென்ற பரமேஸ்வரன், தவயோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயரஜனி, ராகவன், ஜெகதீஸ்வரன், சந்திரிக்கா, ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சன், நிவாசன், நிசாந்தன், ஜீவிதா- நிஷாகரன், அபிநாத்- சகானா, கீர்த்தனா, பிரஜித், தக்ஷா, சர்யுன், மதுசாயினி, லதுசாயினி, கம்ஷிகா, ஆர்நிகன், மிதுலா, வர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாதவன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.