
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி இராசநாயகம் அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு புத்திரனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராசலிங்கம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாந்தரூபி அவர்களின் பாசமிகு மாமாவும்,
வைஷ்ணவி, ஸ்ரீரமணன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற நாகேந்திரம், அரியநாயகம்(Retd, M.L.T ஆதுரா Clinic, மட்டக்களப்பு), செல்வநாயகம்(ஓய்வுநிலை வைத்தியர் கருணா கிளினிக், சங்கானை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தெய்வானைப்பிள்ளை, தங்கவேலாயுதம் மற்றும் வள்ளியம்மை, சிவபாதசுந்தரம்(Retd. asst. Surveyor Superintendent), தவதேவி, வீரவாகு(Unilanka Tea Traders -Colombo), புவனேஸ்வரி, மேனகா, காலஞ்சென்ற கமலாதேவி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
மலர்விழி, கயல்விழி, கலாயினி, முகுந்தன், பாலமுரளி, பாலகருணா, பாலாஜீவன், கலைமகள், அரவிந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,
கணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி, விமலாதேவி, சாந்தமூர்த்தி ஆகியோரின் சித்தப்பாவும்,
தயாபரன், ரகுபரன், பவானி, கிருபரன், ஜெயமோகன், ஜெயகீதன், ஜெயராகன் ஆகியோரின்
மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2021 புதன்கிழமை அன்று மு.ப9.00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details