யாழ். சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி குணசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று அதிகாலை 05:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். அந் நிகழ்விலும் 05-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி: 93/21, இந்துமகளீர் கல்லூரி ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடன் வந்து உதவி புரிந்தோருக்கும், தொலைபேசி, நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக அனுதாபம் தெரிவித்தோருக்கும், மலர் வளையங்கள், கண்ணீர் அஞ்சலி ஊடாக எங்கள் துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு பல்வேறு வழிகளிலும் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
We heard of the unfortunate news, our sincere condolences, deepest sympathies and prayers are with your family during this time. -Roopini, Alagaratnam (USA)