Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 JUL 1946
இறப்பு 28 SEP 2026
திருமதி குணரட்ணம் சாந்தகுமாரி (சாந்தம்)
வயது 80
திருமதி குணரட்ணம் சாந்தகுமாரி 1946 - 2026 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 ஐ ஜிந்துப்பிட்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் சாந்தகுமாரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா 31 நாட்கள் உங்களின்
அரவணைப்பின்றித் தவிக்கின்றோம்
 நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த
காலங்கள் எல்லாம் பொற்
காலங்கள் தான்!

அம்மா உங்களது அன்பான
அரவணைப்பு, இனிமையான பேச்சு,
பழக்கவழக்கங்கள், நேர்மை,
எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!

உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது ஆனால் முழு
நினைவாக உயிர் எம்முடன்
தான் இருக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை மு.ப 06:00 மணியளவில் காக்கை தீவு மோதரை புனித தீர்த்தகரையிலும், வீட்டுக்கிரியைகள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவிருப்பதால், அத்தருணம் தாங்கள், தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் , அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
61/24C ,
ஜிந்துப்பிட்டி வீதி,
கொழும்பு.

 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்