யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஊரங்குணை, குப்பிளான், இந்தியா சென்னை(அண்ணாநகர்), பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் அன்னலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மாவின் இழப்பை அறிந்து மனவருத்தமடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது அன்மா சிவப்பிராப்தி பெறப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! -கோபி ஐயா குடும்பம்.