1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குணரட்ணம் அன்னலட்சுமி
(கிளி)
வயது 77
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி : 11-07-2024
யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஊரங்குணை, குப்பிளான், இந்தியா சென்னை(அண்ணாநகர்), பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணரட்ணம் அன்னலட்சு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழியோடு நீர்கலந்து
ஆண்டு ஒன்றாகி போச்சு
பழிகொண்ட காலன் உமைக் கவர்ந்து
ஈராறு மாதங்களாச்சு
அழுதழுது பார்த்தோம்
வலி இன்னும் குறையவில்லை
கலையான உங்கள் முகமும்
கள்ளமில்லா புன்னகையும்
கனிவான உங்கள் பேச்சும்
காண்பதெப்போ அம்மா...!!
உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!
ஆண்டொன்று சென்றதம்மா
நின் மறைவு நேற்று போல் உள்ளதம்மா
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் நேசத்துடன்.
தகவல்:
குடும்பத்தினர்
அம்மாவின் இழப்பை அறிந்து மனவருத்தமடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது அன்மா சிவப்பிராப்தி பெறப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! -கோபி ஐயா குடும்பம்.