யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சுவிஸ் Chur, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 09-02-2026
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு
எங்களைப் பாதுகாப்பாகப் பார்த்து
நல்லவற்றைக் கற்றுத் தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா
என்று உம்மை இனிக் காண்போமோ அப்பா
மாதங்கள் பன்னிரண்டு ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உம்மைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே அப்பா!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...