1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கண்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Flekkefjord ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபால் ராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 22-09-2026
எங்கள் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஓராண்டு கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.
அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய்
இருந்து நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!
மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு என்றென்றும்
நீங்கள் மறையமாட்டீர்கள் அப்பா..!
இதை எப்படி தாங்குவோம் அப்பா..!
உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்