மரண அறிவித்தல்
தோற்றம் 21 DEC 1951
மறைவு 25 NOV 2021
திருமதி ஞானேஸ்வரி குணசேகரம் (குணம் அக்கா)
வயது 69
திருமதி ஞானேஸ்வரி குணசேகரம் 1951 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பூநகரி மறவகுறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி குணசேகரம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(ஆயுர்வேத வைத்தியர்- கொடிகாமம்) வல்லவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூநகரியைச் சேர்ந்த நாகமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூநகரியைச் சேர்ந்த குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிளிநொச்சியைச் சேர்ந்த குணசீலன் மற்றும் குணபாரதி(சூட்டி- பூநகரி), குணவானதி(லண்டன்), குணதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கலட்சுமி(கொடிகாமம்), சிவகுருநாதன்(லண்டன்), கந்தசாமி(ஹொலண்ட்), வடிவாம்பிகை(நல்லூர்), தில்லைநாதன்(லண்டன்), இந்திராதேவி(கொழும்பு), இலிங்கநாதன்(லண்டன்), மங்கையற்கரசி(நல்லூர்), காலஞ்சென்ற பொன்னையா(Dr. பொன்ஸ்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணாகரன்(பூநகரி), கலைவாணி(கிளிநொச்சி), அனுஷாந்த்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிகல்யா, தனுஷிகன், சுருதிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சங்கவன், சங்கவி, ரிதுஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுமதி(கொடிகாமம்), காலஞ்சென்ற சுதாங்கினி, சுதாநந்தினி(அவுஸ்திரேலியா), சுபாகரன்(வவுனியா), சுகந்தன்(கொடிகாமம்), ஜெயந்தன், துஷிதா(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(இத்தாலி), மகிந்தன்(லண்டன்), சுதர்சன்(நல்லூர்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

மீரா(கொழும்பு), அகிலன்(ஜேர்மனி), கஜன்(கொழும்பு), காலஞ்சென்ற கௌசிகன் மற்றும் விபுலன்(ஜேர்மனி), பபுஜன்(நல்லூர்) மற்றும் கௌசிகா(நல்லூர்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்ற செல்வத்துரை, மீனா(லண்டன்), சித்திரா(ஹொலண்ட்), கந்தசாமி(நல்லூர்), ஸ்ரீதேவி(ஜேர்மனி), ஜெகசோதி(லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தராஜா, ஜெயந்தி(லண்டன்), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் (ரவி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சாந்தினி- அமுதா(லண்டன்), தர்ஷன்(ஹொலண்ட்), பிரியதர்ஷினி(ஹொலண்ட்), காலஞ்சென்ற நிரோஷன், ஷர்மிலா மற்றும் வாசுகி(ஜேர்மனி), திவாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா மற்றும் சின்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், லீலாவதி மற்றும் பரமேஸ்வரி(ஜேர்மனி), அரியரத்தினம்(உருத்திரபுரம், மரணவிசாரணை அதிகாரி- பிரசித்த நொத்தாரிசு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பூநகரி மறவகுறிச்சியில் நடைபெற்று பின்னர் பூநகரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சீலன் - மகன்
கருணாகரன்(கண்ணன்) - மருமகன்
வானதி - மகள்
அனுஷாந்த் - மருமகன்
கந்தசாமி - சகோதரன்
தில்லைநாதன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices