சுவிஸ் Yverdon-les-Bains ஐ பிறப்பிடமாகவும், Avenches ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானேந்திரன் புவிராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-07-2023
புவி நீ எங்களை விட்டு போய்
ஓராண்டு முடிந்தாலும் அது எமக்கு
ஒரு நிமிடம் போல் இருக்குதடா.!
எங்கள் வாழ்வில் நீ சூரியனை போல்
ஒளியை தந்து வாழத்தொடங்கிய வயதில்
எங்கள் எல்லாரையும் விட்டு விண்ணுலகம்
சென்றதன் காரணம் எமக்கு இன்னும் தெரியவில்லையடா...!
அழகான நேரத்தையும் அழியாத
சோகத்தையும் எமது வாழ்வில்
நீ தான் தந்தாய்...!
உன் அழகான சிரிப்பும், ஆறு அடி உயரமும்,
வடிவான கண்ணழகும், முத்துப் பல்லழகும்
எங்கள் கண் முன்னே எப்பொழுதும்
நிலையாக நிற்குதடா...!
அன்புடன் அம்மா என்று அழைப்பவனே
உன் குரல் கேட்காமல் நடை பிணமாய்
திரிகிறோம்...!
உன் ஆத்மா சாந்தியடைய கடவுளை
பிராத்திக்கிறோம்...!
ஓம் சாந்தி.! ஓம் சாந்தி.! ஓம் சாந்தி.!
என்றும் உந்தன் நினைவில்
அப்பா, அம்மா, கஜராஜ்(சகோதரன்), கவிதா(சகோதரி) மற்றும் குடும்பத்தினர்...