1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி 20-01-2026
யாழ். அரியாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் லோகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்