யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானிப்பிள்ளை அழகரட்ணம் துரைராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் தான் 31 ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை..!
பாசம் என்னும் பிணைப்பிலே
இணைந்திருந்த
எம்மைவிட்டு
எங்குதான் சென்றாயோ
உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம் மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய்..?
காத்திருக்கின்றோம் விழிகளில்
நீர்வடிய
வருவாயா எமைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
சனிக்கிழமை தனிலே
காலை பத்ரை மணிதனிலே
எமது விளக்கணைந்து போனது போல்
துரைராஜா எனும் ஒளிமறைந்து போனதெங்கே
அன்பும் பண்பும் நிறைந்தவராய்
பார்தனிலே வாழ்ந்தரே
யாரும் உதவியென்று கேட்குமுன் ஓடிவிடுவீரே
சுற்றியுள்ள எங்களை
சோகத்தில் ஆழ்த்திவிட்டு
நிம்மதியாய் தூங்கிவிட்டீரே
உற்றார் உறவினர்களை
பெற்றெடுத்த முத்துக்களை
அன்பான மனவியை
தீரா துயரத்தில் ஆழ்த்திவிட்டு
கண்ணிரண்டை மூடிவிட்டீரே
ஆழ்ந்த துயிலினில் நீர் சாந்திபெற வேண்டும்
இறைவன் காலடியில் அமைதிபெற வேண்டும்
உமது ஆத்ம சாந்திக்கு எமது கண்ணீரை
காணிக்கையாக சமர்ப்பிக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், தாயார், உற்றார், உறவினர்கள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-03-2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்று, 20-03-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 06:00 மணிவரை Schützengesellschaft Rumbeck, Trifftstraße 42, 59823 Arnsberg எனும் முகவரியில் மதியபோசணம் நிகழ்வு நடைபெறும்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.