

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இணையில்லா இலட்சியத்தாய்
அன்பான ஒரு கூட்டுக்
குடும்பத்தில் பிறந்து
வளர்ந்து
எம்மைச் சுமந்து தன்னுயிர்
பகிர்ந்து
எம் அறு வரை படைத்தாள் - எம் தாய்
சிறுவயதில் இருந்து உணவு உடை
உறையுள் மட்டும் வழங்காமல்
மேலும் அன்பும் அறிவும்
பண்பும் ஊட்டி வளர்த்தாள் - எம் தாய்
தன் பிள்ளைகளையும் பிள்ளைகளையும்
பாரபட்சமில்லாமல் வளர்க்கும்
முறை
அறிந்த நீதிமான் - எம் தாய்
முழுநேர ஆங்கில ஆசிரியராக
கடமையாற்றி எமது அப்பாவோடு
பல வெளி மாவட்டங்களில் கற்பித்த போதும் பல
சவால்களை சமாளித்த சாமர்த்தியமானவள் - எம் தாய்
பல இடப்பெயர்வுகளை சந்தித்த போதும், எங்கள் தந்தையை
நாம் இழந்தபோதும் மேலும் பெரியம்மாவையும்
பல மாமாக்களையும் இழந்தபோதும்
இதுவும் கடந்து போகும் என்று
உறுதியுடன் வாழ்ந்தவள் - எம் தாய்
குறிக்கோள் வகுத்து நெறிவழி
உயர்ந்திட நயவுரை சொல்வார் - எம் தாய்
தொலைபேசி அழைப்பின் குரலில்
கூட உடல்நிலை கண்டறியும் வைத்தியர் - எம் தாய்
உறவுகளின் தகவல்களையும் நிகழ்வுகளையும்
களஞ்சியப் படுத்தி இறுதிவரை
எமக்கு நினைவுபடுத்தும் கணனி - எம் தாய்
பொருளோடு புகழ் வேண்டும் இவ்வுலகில்
காளியின் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே என பக்தியுடன் வாழ்ந்தார் - எம் தாய்
அறவழி வாழ தனது ஓய்வூதியத்தையும்
உவந்து அளிக்கும் வள்ளலார் - எம் தாய்
மொத்தத்தில் இவள் ஓர் இலட்சியத்தாய்!
பூமியில் எமக்கு கிடைத்த சொர்க்கம் நீயே!
நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நாமமும்
தேர்ந்தெடுத்த மருமக்களும்
உங்கள் நினைவால் கசிந்துருகி......
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அன்னை வீரமாகாளியின்
திருப்பாதங்களுக்கு
நம் கண்ணீர் ஆராதனைகளை சமர்ப்பிக்கின்றோம்