யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிங்கப்பூர், யாழ். கரவெட்டி வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிவபாதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
திதி வெண்பா :
சித்திபுத்திச் சிந்தாமணிப்பதி அருள்களல் பூகண்டமங்கல ஐப்பசித்திங்களாறில் அமிர்த நவமியன்று மங்களமாய் சிவத்தை நீத்தே ஞானம் அம்பிகை பாகன் பாதம் பற்றினார் பற்றற்று.
திதி வெண்பா விளக்க உரை :
விளக்க உரை
சிந்தாமணி விநாயகர் அருளுடன் மங்கல வருடத்தில் ஐப்பசி 6ம் திகதி அமிர்தயோக நவமியில் இறுதியாக சிவபாதத்தை விட்டு ஞானாம்பிகை அம்பிகை பாகன் பாதம் பற்றியே பற்றறுத்தார்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப0 7:00 மணியளவில் கீரிமலை தீர்த்தக் கரையிலும், அதன்பின்னர் ந.ப 11:00 மணியளவில் அவரது இல்லதிலும் நடைபெறும் வீட்டுக்கிருத்திய மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
We miss you dearly, Sinnamma. Our memories of time spent together will live in our hearts forever.