யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல.70 உருத்திரபுரம், இல.156 ஸ்கந்தபுரம், ஜேர்மனி Essen ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பாள் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 04/09/2024 ( புதன்கிழமை )
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
தாயாய் எனைத் தாங்கியவளே
தமையனாய் எனைப் பார்த்தவளே
வீட்டு வாசலில் நின்று எனை வரவேற்று என்
வயிறாற உணவுதனை ஊட்டியவளே
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன் அன்னையே
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தேனோ அன்னையே!!!
பிள்ளைகளாகிய எங்களுக்கு காட்டிய அதே பாசம்
அன்பு, கருணை அனைத்தையும்
உங்கள் மருமக்களுக்கும் கொடுத்து வந்தீர்கள்
பிரிவு வேதனையினை அவர்கள் எப்படி தாங்குகிறார்களோ!!
அம்மா உங்கள் பேரப்பிள்ளைகள்
அப்பம்மா எங்கே எங்கே
என்று தேடுகின்றார்கள்
உங்கள் பாசமும், அன்பும் எங்களை சுற்றி
எப்போதும்
வலம் வந்து கொண்டிருக்கின்றது.
Your love has never left us
You walk beside us
Unseen and unheard
You’re so loved and missed.
Though we’re full of sadness that
you’re no longer here
What we shared will never die
It will always love within our hearts.
You’ll never be forgotten
We wish you were still here.
You may not be at our side,
but you are always in our heart
Rest in peace in the hands of God
you will always be in our heart
and those special memories will always
bring a smile to our face.
அன்னாரின் திதி நிகழ்வுகள் வருகின்ற ஆவணி மாதம் 19-ஆம் திகதி (04-09-2024- புதன்கிழமை) வளர்பிறை பூர்வபட்சம் துவிதியை திதி அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருக்கின்றது.
இடம் : Brampton, Canada
தொடர்புகளுக்கு
- Contact Request Details