

யாழ். ஊரெழு வடக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானச்சந்திரன் சிவனேசமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-07-2022
ஆண்டு ஒன்று ஆனது அம்மா
எதை எழுதுவது என்று தெரியவில்லை
ஈரைந்து மாதம் எமை சுமந்து வளர்த்து
இரு கண்கள் போல் பார்த்து, கனிவான
மன உறுதியோடு இவ்வுலகில்
வாழ வைத்த அன்புத் தெய்வமே!!
உம் கடமை முடிந்து விட்டது என்று
எம்மை விட்டு சென்றுவிட்டீர்களா??
காலம் கடந்து ஓடுகின்றது அம்மா
தூங்கி எழும் பொழுதெல்லாம் ஆறமுடியவில்லை
தினமும் காதில் ஒலிக்கிறது உங்கள் குரல் ஆனால்
காணவில்லை உங்களை அம்மா!!
உங்கள் அறிவுரைகள் வழிநடத்தல்கள் எல்லாம் சுமந்து
வலிகள் சுமந்த இதயத்தோடு தினமும் வாழ்கின்றோம் அம்மா!
எங்கிருந்தாலும் எங்களை வாழ்த்துவீர்கள் என்ற
நம்பிக்கையோடு உயிர் உள்ளவரை வாழ்வோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர
இறைவனை வேண்டி தினமும் உங்கள் பாதணி பணிவோம்..
உங்கள் நினைவுகளுடன் பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள், உறவினர்கள்
Our deepest sympathies