
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கேட்றூட் செல்வரெட்ணம் அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசபெத் தம்பதிகளின் மூத்த புத்திரியும், திரு.திருமதி லாசரப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
கமிலஸ் செல்வரெட்ணம்(முன்னாள் சிற்றி மெடிக்கல் பார்மஸி) அவர்களின் அன்பு மனைவியும்,
நேசன்(நிசான்), லக்ஷ்மன்(மார்க்கஸ்), சந்திரன்(ஜூலியஸ்), யூடி, ஸ்ரெலா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ருக்ஸா, பிளஸ்சி, மிதுலா, அசோக்குமார், நெல்சன், பிரெடி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற புனிதம், மனோகரன், நேரு, லவன், காலஞ்சென்ற வனிதா, றீற்றா, யூலியட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லோறா, சிங்கராயர் மற்றும் வினிற்றியா, காலஞ்சென்ற அருள் மற்றும் பபி, யசி, காலஞ்சென்ற மாலினி, கிறிஸ்தோத்திரம், றெஜி, ரஞ்சித்குமார் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறுதி அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் இறுதி சடங்கு செய்யப்பட்டு வெள்ளவத்தை புனித லோரன்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பி.ப 4.00 மணியளவில் பொரளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
இல. 03,
Mary's Road,
கொழும்பு 04.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766689150
- Mobile : +447931711737
- Mobile : +447941079145
- Mobile : +33953430834
- Mobile : +61431210609