யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் மரியராணி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது அம்மாவுடைய இழப்பின்போது எம்முடன் இருந்தவர்களுக்கும் அவருடைய இறுதிச்சடங்கில் பங்குபற்றியவர்களிற்கும் எமது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது அம்மாவுடைய 31ம் நாள் நினைவுத் திருப்பலி 23-04-2022 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றோம். தொலைபேசியூடாக அறியத்தரத்தவறியிருப்பின் இவ்வறிவித்தலை ஏற்றுத்திருப்பலியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நடைபெறும் முகவரி:
Eglise Saint Leu Saint Gilles
84 rue Sadi Carnot
93170 Bagnolet
(Métro 3 Gallieni - Bus 76 / 122 arrêt Eglise de Bagnolet)