யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி காயத்ரிதேவி லக்ஷ்மிகாந்தம் ஐயர் அவர்களின் நன்றி நவிலல்.
8.04.2021 வியாழக்கிழமை அன்று பங்குனி திங்கள் அபரபட்ச துவாதசி திதி நன்னாளில் இறைபதம் அடைந்த எமது அன்புத் தெய்வம் ஸ்வர்க்கஸ்ரீ ஸ்ரீமதி காயத்ரிதேவி அவர்களின் பேரிழப்பால் தனிமைப்பட்டு செய்வதறியாது திகைத்து துவண்டு நின்ற வேளையில் நேரிலும், தொலைபேசி ஊடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதலங்கள் ஆகியவை மூலமாகவும், ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பதாதைகளை வைத்தும், பத்திரிகைகளில் வெளியிட்டும், அஞ்சலி செலுத்தியோரிற்கும், அன்னார் மருத்துவமனையில் இருந்த போது வந்து பார்த்து எமக்கு ஆதரவாக இருந்தோருக்கும், இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் எமக்கு நேரம் தவறாது உணவு தந்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு இன்னோரன்ன வழிகளில் உதவி செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஸ்கந்த புஷ்கரணி"
சிவஞானப்பிள்ளையார் கோவிலடி
மானிப்பாய் வீதி உடுவில்