Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1941
இறப்பு 08 APR 2021
அமரர் காயத்ரிதேவி லக்ஷ்மிகாந்தம் ஐயர்
வயது 79
அமரர் காயத்ரிதேவி லக்ஷ்மிகாந்தம் ஐயர் 1941 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி காயத்ரிதேவி லக்ஷ்மிகாந்தம் ஐயர் அவர்கள்  08-04-2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் எய்தினார்.

யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவஸ்ரீ சின்னஸ்வாமி ஐயர், இந்திராக்‌ஷி அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த சிவஸ்ரீ தியாகராஜ ஐயர், கமலாதேவி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ லக்ஷ்மிகாந்தம் ஐயர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவஸ்ரீ வேதரூபக்குருக்கள்(லண்டன்), சிவஸ்ரீ தியாகராஜக்குருக்கள்(லண்டன்), ப்ரம்மஸ்ரீ உமாசுத சர்மா(கொலன்ட்), ஸ்ரீமதி மாதங்கி(தென்னாபிரிக்கா), சிவஸ்ரீ ஜெகதீஸக்குருக்கள்(கொழும்பு), சிவஸ்ரீ சத்யோஜாதக்குருக்கள்(திருநெல்வேலி), ஸ்ரீமதி தேஜோவதனி(மானிப்பாய்), ப்ரம்மஸ்ரீ தேஜோமய சர்மா(தாவடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீமதி கானசரஸ்வதி(லண்டன்), ஸ்ரீமதி சிவஸாந்தி(லண்டன்), ஸ்ரீமதி விஜிதா(கொலன்ட்), சிவஸ்ரீ பாலசுந்தரக்குருக்கள்(தென்னாபிரிக்கா), ஸ்ரீமதி கௌரிசாந்தி(கொழும்பு), ஸ்ரீமதி சசீந்திரா(திருநெல்வேலி), ப்ரம்மஸ்ரீ வாசுதேவ சர்மா(மானிப்பாய்), ஸ்ரீமதி அஸ்வினி(தாவடி) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற ஸோமாஸ்கந்த சர்மா, பாலசண்முகக்குருக்கள்(கட்டுடை), பத்மநாப சர்மா(கனடா), சுகந்திகுந்தளாம்பிகை(கோப்பாய்), கல்யாணி(கட்டுடை), ஹேமமாலினி(வத்தளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரசூடாமணி ஐயர்(சித்தன்கேணி), ராஜபாஸ்கரன் ஐயர்(திருச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனசோபினி, ஜனசுகனி, ஜனஅபிதன், லஷ்மிகாந்தன், லட்சுமி, கோபிகன், கனுஷிகன், பாலகாந்தன், பாலினி, திவ்யக்‌ஷன், வியாசன், வியாபினி, விஹாசினி, சாய்ஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தருகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாகவும் சமூகநலன் கருதியும், மேலும் வீட்டினர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ள காரணத்தால் வீட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.  

தகவல்: குடும்பத்தினர்