Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 01 APR 1944
மறைவு 22 APR 2026
திருமதி கணேசவேல் இரத்தினதேவி
வயது 82
திருமதி கணேசவேல் இரத்தினதேவி 1944 - 2026 மன்னார், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார் அடம்பன் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசவேல் இரத்தினதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 கடக்கிறது ஆனால்,
மூன்று நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!

அம்மா உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள எம் தாய் போல் எவரும்
இல்லை எம் அருகினில்.. 

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது 

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
நாட்கள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது 

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது

எத்தனை ஜென்மம் இருந்தாலும்
மறுபடியும் தாயாக நீங்கள்
வரவேண்டும் அம்மா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.