Clicky

உதயம் 08 DEC 1948
அஸ்தமனம் 25 FEB 2025
திருமதி கணேசராணி கணேசலிங்கம்
வயது 76
திருமதி கணேசராணி கணேசலிங்கம் 1948 - 2025 புலோலி மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சங்கீதா மகேசன் 28 FEB 2025 United Kingdom

"அன்பான ராணி மாமி; பிரதோஷம் அன்று சிவபெருமான் தங்களை அழைத்து விட்டார். மாயப்பிறப்பு அறுக்கும் மன்னனடி சேர்ந்து விட்டீர்கள். 45 வருட இனிய துணை இழந்து துயரத்தில் தவிக்கும் யப்பான் மாமாவை உங்கள் ஆன்மா என்றென்றும் காக்கட்டும். நீங்கள் திரு, திருமதி செல்லம்மா, தம்புசாமியின் அன்பான மருமகள். உங்கள் அம்மா, மாமியார், இரண்டு சகோதரிகள் வரிசையில் பூவோடும், பொட்டோடும், பட்டோடும், தீர்க்க சுமங்கலியாக அமரத்துவம் அடைந்தீர்கள் காலம் மாறினும், தேகம் அழியினும் உங்கள் நினைவுகள் என்றும் அழியாது"; எனதும், என் அம்மாவினதும், துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலிகள். இப்படிக்கு:- சங்கீதா-மகேசன் (செல்லகிரி, சீப்சைட் குடும்பம்) - லண்டன்.