
அமரர் கணேசபிள்ளை தனலட்சுமி அம்மா
(இராசு)
வயது 93

அமரர் கணேசபிள்ளை தனலட்சுமி அம்மா
1930 -
2024
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganeshapillai Thanaladchumi
1930 -
2024

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் விருப்பத்திற்குரிய மைத்துனி அவர்கள் தம் வாழ்வை நிறைவு செய்து இறை பதம் அடைந்து விட்டார்.அவர் ஒரு பூரணமான அம்மையார். இன்ப துன்பம் எதையும் மனதளவில் ஏற்று தளப்பமின்றி இருப்பார்.யார் என்ன உதவி கேட்டாலும் தன்னால் முடிந்த வரை உதவி செய்வார். எங்கள் கணேச ம.வித்தியாலயத்திற்கு மேல் மாடி கட்டுவதற்கு காணி தேவை என்றவுடன் எதுவித மறுப்புமின்றி தேவையான அளவு காணியைத் தந்துதவியவர்.திரும்பவும் மதில் கட்டும் போது கூட அவரது பிள்ளைகள் மேலதிகமாக காணியை வழங்கினர். அவர்களின் பிரிவுத் துயரில் எங்கள் வித்தியாலய சமூகத்தினர் பங்கு கொள்வதோடு அவரது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற பிரார்த்திக்கிக்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
Please accept my sincerest condolences and know that i am here for you. May care and love of those around you provide comfort and peace to get you through the days ahead. May Rest in Peace.