

கடவுள் கொடுத்த உசிரை காத்திருந்து பறித்த காலனே உனக்கொரு மரணம் வராதா? ஒரு முறை எரித்து சாம்பலான பொருளை இன்னொருமுறை எரிக்கவே முடியாது ஆனால் கணேசா… உன் நினைவுகளால் தினமும் எம்மை மறுபடி மறுபடி எரித்துகொண்டே இருக்கிறாயே இறுதியாத்திரை இறந்த உனக்கு நிஜமாகவும் உயிரோடிருக்கும் எமக்கு ஒத்திகையாகவும் இருக்கிறது தேடித் துரத்துகிறது மரணம் வாங்கி வைத்துக் கொள்ள மட்டும் ஏனோ மறுக்கிறது ஆனாலும் பழக்கப்படுத்த வேண்டும் பூமிக்கு பாரமாய் படைக்கப்பட்டோம் உயிருக்கு நாளுமாய் பிச்சை எடுக்கின்றோம் நிஜத்தைத் தேடிய இறிதிப் பயணத்தில் இன்று நீ ……….! நாளை நாமெலாம் …! மறந்திடவில்லை நண்பனே! மரணத்திற்கு மிஞ்சியது எதுவும் இல்லை அதற்கு நீயும் விதிவிலக்கில்லை உயிருடன் இருப்பாய் என்றும் எம் நினைவுக்குள் உயிர்ப்புடன் இருப்பாய் சென்றுவா தோழனே…??? இராகவனும் நடேஸ்வரா/மகாஜனா நண்பர்களும்
Our Heartfelt Sympathy to you and yours at this sad time.