1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணேசமூர்த்தி காந்தசீலன்
(சீலன்)
கணேசமூர்த்தி & சன்ஸ் உரிமையாளர் வவுனியா
வயது 49
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
வவுனியா சேமமடு படிவம் 2ஐப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசமூர்த்தி காந்தசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு
மறையவில்லையே!!
மாதங்கள் பன்னிரண்டு ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே..
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்...
ஓராண்டென்ன! எத்தனையாண்டுகளானாலும்
உன்னடி தொழுது வணங்குவோம்!
நிலையான நித்ய ஆத்மசாந்தி வேண்டி
றைவனிடம் வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்