Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 MAR 1926
மறைவு 09 NOV 2021
அமரர் கணேசன் பொன்னம்மா
வயது 95
அமரர் கணேசன் பொன்னம்மா 1926 - 2021 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேசன் பொன்னம்மா அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி கணேசன்(முன்னாள் கொழும்பு சைவம் முன்னேற்றச் சங்க உபதலைவர் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம், தம்பிராசா, நல்லையா, பொன்னையா, இரத்தினம், புஷ்பராணி மற்றும் லண்டனில் வசிக்கும் செப்பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தனபாலசிங்கம்(மாதவன்- இலங்கை),  இராஜேஸ்வரி(தங்கமணி- இலங்கை),  பாலச்சந்திரன்(பாலன்- இலங்கை), மகேந்திரன்(இத்தாலி),  ஜெயச்சந்திரன்(சந்தன்- இலங்கை),  ஜெகதாம்பிகை(ஜெகதா- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வேந்திரம்(இலங்கை), விஜயகுமார்(இத்தாலி), கமலாதேவி(இலங்கை), குணவதி(இலங்கை),  திருஞானவதி(இலங்கை), விமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதவன், டெனா(சுவிஸ்), நிவேதன்(இலங்கை), மாலினி-கலிஸ்டன்(லண்டன்), ஆரணி-சுகிகரன் (லண்டன்), நிஷாந்-சபிதா(இலங்கை), நிஷாளினி-அஜித்குமார்(இலங்கை), சணா- திலினி(லண்டன்), றொஷான்-பென்சி(லண்டன்), அனுஜன்-உஷா(லண்டன்), ரதீபன்-சங்கீதா (இலங்கை), கார்த்திக்(டுபாய்), நிவேதா, மார்க்கோ(லண்டன்), சுவேதா (லண்டன் ) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அர்ச்சயா, அக்‌ஷரன் ஆயுஸ்வன், ஜீனுஷன், லொகாரா, லியாரா, அபிநயா, ஜெசன்(லண்டன்), அவனிஸ், தாக்‌ஷித்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது  இல்லத்தில்(அன்பகத்தில்) நடைபெற்று பின்னர் காக்கை தீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

ஆல் ஒன்று சரிந்ததோ
சரிந்து வீழ்ந்ததோ
பொன்னம்மாமி என அன்பாக அழைத்த ஆலமரமொன்று
விடியலை நோக்கியதோ விலைமதிக்க முடியாத உறவொன்று
மீளாத்துயில் கொண்டதோ உறவுகளுகாக ஓடோடி வரும்
உயர்ந்த உள்ளமொன்று கண்ணை மூடியதோ
கண்ணியமாய் வாழ்ந்த கற்பக விருச்சமொன்று
ஆறாத்துயரில் ஆழ்த்தியதோ அன்பாக அரவணைத்த
ஆத்மா இன்று கொத்தாக கண்ணீர் சிந்தினாலும்
வத்தாத துயரம் நாம் பிறந்த மண்ணில்
நன்மை தீமை எதுவாகிலும் முன்னுக்கு ஓடிவந்து
முன்னின்று இறுதிவரை அனைத்துக்கும் சலிக்காது
பாடுபட்டு அனைவரது உள்ளங்களிலும் ஆலம் விழுதுபோல
நிறைந்த அன்பான ஜீவன் இன்று அனைவரையும் கலங்கவைத்து
கண்ணை மூடியதோ ஆண்டாண்டு காலமும் அயராமல்
தன்முனைப்போடு ஆல்போல உறுதியோடு நின்ற பொன்னம்மாமியை
அமரராக பார்கும்போது ஆறாது அழுதாலும் ஆறாது
அன்னாரது ஆத்மா சாந்திபெற்று பெற்றவரும் உற்றார் உறவுகளும்
மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - மகன்
ஜெகதாம்பிகை - மகள்
ஜெயச்சந்திரன் - மகன்
பாலச்சந்திரன் - மகன்
நிஷாந் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices