12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை கணேசு
பிரபல சமூக சேவையாளர்
மறைவு
- 10 APR 2013
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மட்டுநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல சமூக சேவையாளரும், வன்முறைகளுக்கு எதிராக பணியாற்றியவரும், மதங்களுக்கிடையே சக வாழ்வை பேணியவருமான கணபதிப்பிள்ளை கணேசு அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
போல் உம்மை உருக்கி எம்மை
காத்து வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின் அன்புக்காய்
ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த நெடுந்தீவு கணேசு அவர்களின் வாழ்க்கை வரலாறுக்கு : Click here
தகவல்:
குடும்பத்தினர்