யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மட்டுநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல சமூக சேவையாளரும், வன்முறைகளுக்கு எதிராக பணியாற்றியவரும், மதங்களுக்கிடையே சக வாழ்வை பேணியவருமான கணபதிப்பிள்ளை கணேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா!
உங்களை பிரிந்த பத்து வருடம்
பத்து யுகமாய் கழிந்தது
உங்கள் நினைவொன்று தானே
எம்மை நிழலாய் தொடர்கின்றது
எங்களை எல்லாம் தவிக்கவிட்டு
எங்கு சென்றீரோ?
எமை விட்டுப்பிரிய உங்களுக்கு
என்றும் மனம் வராதே அப்பா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
பாதிவழியில் வானுறைந்து
பத்து ஆண்டு ஆனாலும்
ஆறாது
உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் வாழ்வு
ஒளிமயமாக அமைவதற்கு
அல்லும் பகலும் அயராது
உழைத்தீர்கள் அப்பா!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும்
அரவணைத்து
வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும்
உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த நெடுந்தீவு கணேசு அவர்களின் வாழ்க்கை வரலாறுக்கு : Click here