3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானகலா சச்சிதானந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
“My thoughts and prayers during this dark time in your life”