Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUL 1960
இறப்பு 20 MAR 2022
அமரர் ஞானகலா சச்சிதானந்தன்
வயது 61
அமரர் ஞானகலா சச்சிதானந்தன் 1960 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானகலா சச்சிதானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’

தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
இரண்டு ஆண்டுகள் சென்றதம்மா!

என்ன நடந்தது ஏது நடந்தது என்று கணக்கிட்ட
நாட்கள் அதற்குள் ஆண்டு இரண்டு ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும் 
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!

அன்று எம்முடன் வாழ்ந்து மறைந்தீர்கள்
இன்று எம்முடன் மறைந்து வாழ்கின்றீர்கள்.
பிறப்பு, இறப்பு இணைந்தது எனினும்
இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லையம்மா!
இந்த உடலும் உயிரும் உங்களது என்றாலும்
கண்ணீரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!

நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனிடம்
நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
‘ஆன்மா என்றென்றும் அழியாது’
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

தினம் தினம் உங்கள் பிரிவு துயரால் துயருறும் கணவன், உற்றார், உறவினர், நண்பர்கள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Mar, 2022