1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கபிரியேல் கிறிஸ்தோப்பர்
1942 -
2019
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கபிரியேல் கிறிஸ்தோப்பர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
உங்கள் ஆத்மா தேவனுக்குள் இளைப்பாற
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
றமேலா தவநாயகம்