யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அடப்பன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெர்னாண்டோ செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழும் எண்ணங்கள்
நிலைக்காத மனித வாழ்வு
நிலைக்கவில்லை எம் தந்தைக்கும்
ஆனால் அவர் நியாயமான எண்ணங்கள்
வாழும் அவர் உறவுகளில்
ஒற்றுமையே வாழ்வு என்பார்
எல்லோரும் நல் மனிதரென்பார்
பொன்னகையும், புன் சிரிப்பும்- அவர்
முகத்தில் தவழ நடந்திடுவார்
வார்த்தைகளை அளந்திடு என்பார்
நா கூசும் வார்த்தைகளை விலக்கிட
எம் வாயதனில் சுண்டிடுவார்
இமையம் கூட அசைந்துடும்
இலங்கை வேந்தன் இராவணன்
அசைத்து விட்டால்- ஆனால்
எம் தந்தையவர் பொறுமையை யாரும்
அசைத்திடத் தோன்றின் தோற்றிடுவார்
இத்தைனையும் கற்பித்த நீர்
எமக்கில்லை இன்று- எனினும்
நாம் மறந்திடா உம் எண்ணங்கள் எத்தனை எத்தனை
உறங்குங்கள் இறைவனடியில் உறங்குங்கள்
உமக்காக நாம் வேண்டுகிறோம்!!
Hi . Helan Please accept my deepest sympathy for your dad's loss.